Moderator
அழகிய நுதலாள்! என்னைத் தீண்டி;
உன்பார்வை மேய...
உலகஉருவ அழகுகளோ உன்னை--
உண்ணென உருள;
கலகம் செய்ய அன்பு கச்சிதம் - உன்
இதயத்துள் அமர;
விலகிட இயலாமல் காதல் - இன்று...
சுழற்றிடுது என்உள்ளே!
மலைகள்மீது பனிப்பட மயங்க...
சூழல்... இனிமை!
நிலவும் முகிலும் வருடி நீங்க...
வானம் இனிமை!
தாரகையர் தரணி கண்டு ஏங்க!
இரவு இனிமை!
நீயும் நானும் ஒன்றென ஒன்ற...
தழுவல் இனிமை!
கருத்துகள்
கருத்துரையிடுக