உன்மண்... [சு]வாசி; பின்நீ சிவாசி!

Photo 
Sithayan Sivakumar's profile photo     Photo:   Sithayan Sivakumar




ஓசி ஆசி பாசி வேசிஅன்ன யோசி!
நாசிசு வாசி  தூசி ஊசி காசி;
ஏசிஇ ராசி வீசி; நேசி, மாசிவை -
காசி பேசி நழுவிடாதே கூசி;சிவ -
காசிவா! உன்மண் வாசி; பின்நீ சிவாசி!

புரியாத அரrசியல் புதி​ரே! இந்தியமண் மானுட​மே!

சாதிக் கட்சிகள் அரசியலில் அருவறுப்பாம்! ஆயினும்;
சாதிகளை விடமாட்டானாம்! அதுஏன் என்றால் -
நீதிசம தர்மநி​லை கேடுறக் கூடாதாம்! இந்துமதத்துள்
ஓதுவோனுக்கு சாதி அழிப்புமணம் செய்திட லாமேநீ!


மனது வலிக்கின்றது;  மன்னிக்க மறுக்கின்றது! தினம் -
அதிர்ச்சிச் செய்திகளால் தீவிரவாதம் முற்றுவதுபற்றி
உதிரம் ஒழுகலுற்றது ஒவ்வொரு நாளும் வேற்றுமைப்பட்டு;
அகிலம் அதிர்கின்றது! அக்கறைப்பட ஆண்டவனும் இல்லை!
பெருகுகிற அக்ககிரமங்கள் பிய்ந்து ஒழிவது எவ்வாறோ?

ஆண்டவன் பெயராலே அனைத்தும் நிகழ்கின்றனவாம்!
ஏனடாஇது என்றாயோ எல்லாம் இறைவன் செயலாம்!
வேண்டாமே பேதங்கள் விடென்றால், ஓதுவோன் மதஊழல்;
காண்டா மிருகங்கள் [பசுமாட்டுக்குள் தெய்வத்​தைத் திணித்து]
மாட்டு கறி அரசியல் செய்கின்றனவே!


கருத்துகள்