Photo: Debra Simpson
காண்உள்ஓர் பூமேல் கவிழ்கரு வண்டுநோக்கி
மான்உள் முயங்கும் மயங்கும் விழிஅந்த
தேன்உள் உருளும் திரண்ட கனிதான்என்
ஊண்ஆய்ந்து ஒன்றும் நிலா!
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனுள் இருள்கழுவும் திங்களே! நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிசெய்!
தமிழ்சங்க மாய்நான் தளிர!
கருத்துகள்
கருத்துரையிடுக