பெண்ணடிமை பேத விலங்கு ஓர் ஊழல்!

 
   Photo :   Ishitha Iyer


கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்; 
கர்ப்பகவி நாயகன் கண்டு தடுதானா?
சொற்களுள் மாளும்  சுகங்கள் எவை?யாவும்;
கற்சுவற்றுக் கல்லேஆ யிற்று!

பெண்ணடிமை பேத விலங்கு ஓர் ஊழல்!
ஆண்மோகம்... ஆன்மிகம் என்றாயிற்று!

நாக தோஷம் என்பதாய் ஓர் ஊழல்!
நாகர்தேசம் சுவடேதும் இன்றி...
பஞ்சமி நிலங்களே அன்ன மறைந்துற்றது!

தசரதன் தேர்சக்கரத்தில் ஓர் ஊழல்!
பட்டத்துஅரசி  மூத்தாள் மகன்...  

மண்ணின் மைந்தன் பரதன் அயோத்தியை,
[நாடு ஆளும் உரிமையை
அநீதியாய் இழக்கும்படி ஆயிற்று!

பரதன்தன் அரசு அரியணையில் செருப்புக்களை
வைத்து ஆண்டிட்டதாக ஓதல்! 

அது பாரததேசத்தை, தேசஇறையாண்மையை,
மக்களை; இன்றும் கேவலப் படுத்திடும்...
'வதந்தியாய்' உலாவுகின்றது!


போர்களத்தில் ஓர்ஊழல்; போயிற்று... 
கர்ணன்உயிர்!

பாற்கடலுள் ஓர்ஊழல்; [ஏமாற்றும் கள்ளன்]
பள்ளி கொண்ட கதையாயிற்று!

யானைமுகம் மானுடமுண்டம் ஓர்ஊழல்!
பேதம் ஓதுவோனின் பிழைப்பு ஆயிற்று!  

பேணிட்ட மனுஅதர்மம் ஓர்ஊழல்;
இந்திய துணைக் கண்டம் நான்காயிற்று!

மோகினி அவதாரமாய் ஓர்ஊழல்;
கற்பழிப்பு கடவுள் லீலை ஆயிற்று!

ஏக அலை அவன்! அவனுடைய,
கட்டை விரலை வெட்டிட்ட ஓர்ஊழல்...
துரோக ஆச்சாரி வஞ்சக தந்திரம் 
தகுதிதிறமை ஆயிற்று! 
 


கற்ப்பிப்பதில்  கடவுள்பொய்க் கதைகளை;
வதந்திகளாய்  கடவுள் நம்பிக்கையை...

அரிசியில் கற் துகள்கள் அன்ன... 

அரசியலில் மதத் திகில்களை, 
கலப்பது எப்போதும முடிவுறா திருட்டு!
[அந்தப்படிக்கு]

ஒற்றுமை விலகி, மத பேதங்கள்  ஓதி 
நாட்டுள்...வேற்றுமையை நுழைத்திட்டது;
ஓர் ஊழல்!

இதில் இந்தியா ஒரே தேசம்!
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர்...
முதலாவதாக  இரண்டுப்பட்டது;
பின்நாளில் மூன்றாயிற்று! 

இந்து எனும் சொல்  அறிவியல் விலகிட்ட...
முதலாம் அந்நியரின் ஊழல்!

இதில் காந்திஜியை தின்றிட்ட...
RSS இந்துத்துவா வெறிஊளை கொழுப்புற்றது! 
அதனால் BJP ஆட்சி கருவுற்றது!

ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன் 
கணவாய்கள் வழிச் சாதிகள் ஓர் ஊழல்!

இதில் சிந்து [க்கள்] எனும் சொல்... 
இந்து'என திரிந்துற்றது!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்...  
மண்ணின் மைந்தரை [மதம் மாறிடுவோரை] 
இந்து என்பது ஓர் ஊழல்! 

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார் 
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]


அஞ்சி அஞ்சி அஞ்சியே அடிமையான மானுடமே!
நஞ்சும் அஞ்சும் நஞ்சடா நைந்த பேத நோயடா!
தஞ்சமாகி மதசாதி யுள்தன்  மானம்விட்ட மூடரே!
மிஞ்சு மிஞ்சு மிஞ்சவே மிரண்டழியும் வருணஓதலே!

சாதிஓதும் வேற்றுமையே! சமயமனோ வியாதிகளே!
சாவு வந்துற எவனுக்கும் பிறப்பு இல்லையே!

ஆதிக் குரங்குகள்தாம் மானுடம் ஆயிற்றே!  
அற்ப  நேரத்திற்குள் சுவாசம் நின்றிடுமே!

ஏதுகடவுளே! எதற்கு மதங்களே! மரணம் 
ஏகவே  பொம்மை இறைவனாகி தடுத்திடுமோ? 

போதிபுத்தன் அன்ன மதிமானுட நாகரிகமே!
புதைபேத ஓதல்களை; அன்பிலேநாம் ஒன்றவே!


   Photo :  Latest Hindi Movies

கருத்துகள்