என் ஞான அறிவிய​லே!



என் ஞான அறிவிய​லே!                                                                                

உனக்குள் செயற்கையாய் ஓர் கிருமி [வைரஸ்]
Tசுனாமி அன்ன புகுந்திட்டது... எப்படி?
பாற்கடலுள் அசுரர் இணைந்து கடைந்திட ​
தேர் அன்ன ​அ​சைந்திட்டதாம் வெண்ணெய்!

தேவாஅமிர்தம் என்று அதற்கு பெயராம்!
திரண்டிட்டதாய்ப் புரளியை கிளப்பிட்டவன்;
மானுட நாகரிகத்தை புரட்டிட்டது போல்... உன்னை,
தீமைகள் நோக்கி நகர்த்திட்டவன் எவன்?

உலகமே! நீ அதிரும்படிக்கு... அணுகுண்டுகள்
பல நூறுகளில் வெடித்து ஆதிக்க சோதனைகள்
நிகழ்த்தி; உயிகள் பலநூறு கோடிகள் இறந்துபட...
ஆக்கிட்ட ஆதிக்கவெறிச் சிந்தனையாளனோ?

மண்டை ஓட்டுக்குள் பதுக்கிட்ட மூளையை,
அன்பால் இந்தியர் என்று; ஒரே  மானுடமாய்,
மக்களாய் பூர்வக் குடியினரோடு ஒன்றாமல்;
மதத்தால், சாதிகளால் பன்றி மடஅய்யன்களாய்,

குரங்கு பித்தர்களாய், ஒற்றுமைக் கொல்லும்,
மனு[ஸ்] அதர்ம மிருதி... உதிரம் உரிஞ்சிடும்
ஒட்டுண்ணிகளாய்; பேதமனோ வியாதிகளாய்;
அன்றாடம் பலநூறு ​கோடி கி​லோ வெண்ணையை

எரிஅடுப்பில் உருக்கி யாவும் உலக நன்மைக்காக
என்பதாகவும் பொய்யுரைத்து யாகத்தீயுள் வீணடித்து
வேற்றுமை ஓதி... பல நூறு சாதிகளாக; மானுடம்
சிதைய உடைத்திட்டவனோ? அகிலமே!உன்

வயிற்றை பயிர்கள் வி​ளையும் விவசாய
பணிகளுக்கு  உட்படுத்திடாமல் கிழித்து...
கிணறுகள் பலஆயிரங்கள் என ஆக்கி நீரை
உறிஞ்சி எடுத்தவனோ?


அறிவேநினை தென்னாடு அன்றாண்ட நந்தன்;
இராவணன் ஏகலைவன் (இ)ரண்யன்
நரஅசுரன்; புத்தன்அ சோகன், புகழ்பெரியார்,
அம்பேத்கர்; சித்தர்நம் வள்ளுவரும் [சேர]சேர்த்து!

நம்பா வனக்குரங்கும் நம்பும் முனிவர்ஆகஉன்னை
வம்பே புரிந்தும் மறையாபி சாசுகளும்;
கம்பே துணைஎன்று காண்சித்தர் யாவரும்;
நம்முன்னாள் மானுடமே நம்பு!

அன்னியர் பேச்சை அரவணைக் கும்வரை;
எண்ணுக! ஏய்ப்போன் இனிப்பே சுதந்திரம்;
கொன்றிடும் நோய்பேதமும் குற்றமத ஓதலும்;
நன்குஅறிக, நாட்டுக்(கு) எதிரி!

மாயன் மகளாகி மகமாயி ஆகஉன்னை
பேயுருவாக கண்டு பிரித்தும்; ஓதுவோர்கும்;
ஓயாத் துயரங்கள் ஓயநீ செய்தாயாம்!
சாயாசதி சாதிகளை மாய்!








கருத்துகள்