இ்து... சாதி விலகிய காதலர் தேசம்! சோலை தேனீகட்கு...


Photo

திகில் இரவில் பூமிப் பகல்என 
சிரிக்கின்றாள் ஏன்?

முகில் துகிலொடு நிலவு முத்துக் 
குளிக்கின்றாள் ஏன்?

மகிழ்என வானம் பூமழை தூவி 
வாழ்த்துகிறாள் ஏன்?

அகில்சந்தனம் இக்கன்னியை 
அற்ப்புதம்என  முகர்கின்றன ஏன்?


தே(யிலை) செடிகள், காதலர்க்கு--
தூதுவிடும்!
தாட்டுப்பூட்டு கொடிகனிகள்...
சுவைஎன்று அசையும்!

மாகொடி... செடி... மரங்கள்; 
மணங்கள் தூவும்!
தெற்குதிசை காற்று, குன்றுகள்...
தீண்டும்!

குளிக்கின்ற கன்னியரை, 
மீன்கள் கடிக்கும்! 
குறும்பு காதலரின் நினைவு...
வெடிக்கும்!

குருவி-குயில், இணைந்து...
கவிதை படிக்கும்!
குரங்கு, கனிகள்உண்டு...
மரகிளை ஒடிக்கும்!

பூவையின் கணுகாலில்;
அட்டை ஊறும்!
பாவாடை, தாவணிகள்...
பதறும்; மேலுயரும்!

ஓடிவந்து பிடுங்கிட 
விடலை பையன்...
அன்புக்குள்; சி[லிர்]க்கும்...
காதல் துளிர்க்கும்!

சேவல் தீனியை கிளறி...
கொடுக்கும்!
கோழியோ 'கொக்கொக்'
என்று கொத்தும்!

கோழியின் ஒப்​புதல் பெற;
சேவல், சிவன்ஆகும்!
சேவலின் தவிப்புக்கு, கோழி...
மோகினிஅன்ன மாறும்!

வளைந்தோடும் பாம்பு...
புதர் தேடும்!
கலைமான் துணைகண்டு...
குதித்தாடும்!

முகில்காண, காணமயில்...
தோகை விரியும்!
இரவுவர, நிலாவோடு...
நதிகள் குளிர்ந்தோடும்!

அகிலோடு சந்தன மணம்...
உறவாடும்! வனம்--
நுகரும் வண்டுஏமா றாதவாறு...
தேன்பூ சுரந்தாடும்!

தென்றலுக்கு, சோலை...
மகரந்த தூதுவிடும்!
தேடிவந்த தேனீகட்கு... 
சுவை விருந்தளிக்கும்!

ஏலத்துடன் கற்பூரம் மரங்கள்...
கமகமக்கும்! இ்து...
சாதி விலகிய காதலர் தேசம்..
நிம்மதி அளிக்கும்!

Animated photo

கருத்துகள்