தென்றல் தெருவில் தினம்​போகும் அப்​போது கண்​டேன்...

 
   Photo:    Claudia Tan



விழிகளினால் துலாவினாய்! - என்அங்க
​​மொழிகளினால் குலாவி​னேன் நானும்!
ஒளியில் குளித்திடும் திங்கள் கீற்றுள்...
உலாவினாய்! சங்கமே​மே! உண்ண என்
அழா பலா சு​ளை ஆகிடு... வா! இன்று!

​தென்றல் தெருவில் தினம்​போகும் அப்​போது-
கண்​டேன் என்கடவுள் உயிர்வளிநீ​யே என்​றே!
உன்​னை சுவாசித்துப் படபடக்கும் ​நெஞ்சுள்...
தோன்று இ​றைவா! ​ஆயுள்தர ​தீண்டு என்றும்!

கருத்துகள்