ஒரு கன்னியின் அறிவு வெளிப்பாடு!


   
    Photo:   Prakash JP



ஒரு  காதலனின் அய்யமும்...
கன்னியின் அறிவு வெளிப்பாடும்!



Could I marry you?
Why couldn't?
Because you are 
A Foreign country citizen!

Every nation is in our world!

Between us Could we say?
Is love only enough...
For human beings' unity and marriage?

That's, is there no difference,
In fulfilling our Love of passions?

Among true human beings by culture;
Might there be limits or problems?

While we join together,
Either by friendship or love...
At our earth...
Too we seem as one in nature!



ஆண்:
உன்னை நான் மணக்க முடியுமா?

பெண்:
ஏன் முடியாது?

ஆண்:
பெண்ணேநீ வெளி நாடு அல்லவா?

பெண்:
எந்நாடும் உலகில் உள்ளது!


ஆண்:

காதல் மட்டுமே - நாம்
இணையப் போதுமா?
இடையூறு ஏதுமே...
இல்லை என்பதா?


பெண்:

அனைவரும் அன்புள் ஒன்றிட...
மானுட நாகரிகத்தில்; 
பேதமுள் எல்லைகள் எதுவுமே,
அகிலத்தில்  இல்லை அல்லவா?

ஆண்:

கடைஆணி கழன்றிட்ட
மாட்டு மரவண்டிஅன்ன - நாம்
குடைசாய்ந்து வீழ்வோமா?

பெண்:

பலநூறுகளில் இருந்து
ஆயிரமாய் நொருங்கிட்ட
மானுடத்துள்...

மதம் சாதி...
ஓதிடுவோன்தான்-
இன்றும் நாட்டுக்கு...
கடை ஆணியா?


ஆண்:

நம்காதல் உடைந்திடுமோ?
மத பேதங்களால்!
அடிமைகளாய்...

நாமும் நம்மண்ணுள்
தொடர்ந்து ஒடுங்கிடுவோமோ?           


பெண்:

இது அன்பு இணைதள யுகம் அல்லவா?
புது கனவு வளைத்தளம் திறந்து,
கணனி காட்சிகள்அன்ன இணைந்து...

விண்கலம்போல் விரைந்து
காதல் வானுள்செவ்வாயை
தெரிந்து முத்தமிட்டு நகர்ந்து
பால்வெளி வீதியையும்
ஆய்ந்திடுவோமே!

நம்காதல், மதம்சாதி ஓதும்...
மானுடம் பிரிக்கும் மடம்அல்லவே!

சுதந்திரத்தை விளைவிப்போம்!
அனைவருமே அன்பை நுகர
மானுடநாகரிகம் கருத்தரிக்க
ஒன்றுவோம்!

கல்யாணம் கூட தேவையில்லை!
தாமதிக்காமல் என்னோடு கல...வா!
இன்றும் காட்டு மரவண்டிகள்
அறிவியல் உலகத்தில் நமக்கு எதற்கு?

கருத்துகள்