ஆண்:
வேலைப் பழிக்கும்உன் மென்கூர்மை
நோக்குதாக்க-
காலைப் பிடித்தேன்; கவிழ்ந்தேன்;
இடுப்பொடித்தாய்!
மாலைவந்தால் நாளும் மயக்கி-
நொறுக்குகின்றாய்!
சேலையணி(யா) கோயில் சிலையே!
பெண்:
கொள்ளை நிகழாத குவலைமலர் மங்கைநான்!
துள்ளி நடந்து துவளாது பாசத்தினால் -
கள்ளமாய் ஏதும் இன்றி காதல் கனியவர...
எள்ளிவிலக லாமோ? ஏங்கிடுமே உன்இளமை!
கருத்துகள்
கருத்துரையிடுக