

இதுபோல் பெற்றவளின் அணைப்புநான் அடைந்தேனா?
எனக்கு தெரியவில்லை!
அதுதான் அம்மா எனும்பிணைப்பு என்றால் நிகரானது...
எது? ஆண்டவனும் இல்லை!
அம்மா இல்லாது ஓர்வாழ்கையென்றால்... இறைவன்...
எனக்கு அவசியமோ? இல்லை!
அம்மாஇறந்து அப்பா தனிமைப்பட ஆலயம் எதற்கு?
கல்வி தளங்களாக ஆக்குங்கள்; கற்க அறிவியலை மூளை!
பெண் என்பவள்...?
கருவாகி உருவாகி காலத்தில் மழலையாகி;
மெருகாகி அழகாக பருவத்தில்கனியாகி...
உறவறிய தாயாகி உணர்வில் பாசசுவாசமாகி;
சருகாகி தாய்வாழ்த்தும் பிள்ளைக்கு நாளும்...
உருகுகிற மெழுகாகி... ஓய்கிறவள் பெண்!
கருத்துகள்
கருத்துரையிடுக